இந்தியா - அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



இந்தியா - அசாமின், மோரிகான் (Morigaon) பகுதியில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் இன்று வியாழன் (27.02.2025) இன்று அதிகாலை 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளது.


ஒடிசாவின் பாரதீப், பூரி, பெர்ஹாம்பூர் மற்றும் சில இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


இதேவேளை, வங்காள விரிகுடாவில் 91 கி.மீ ஆழத்தில்  மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் மையம் வங்காள விரிகுடாவில் இருந்ததால் அதன் தாக்கம் “மிகக் குறைவானது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், நிலநடுக்கத்தினால் உயிர் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.


இதேவேளை, இந்தோனேசிய கடல் பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.

வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை
புதியது பழையவை