பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மண்டூரிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலை வரையான பேரூந்து சேவை இன்றைய தினம் (01.02.2025) மண்டூர்த் துறையடி ஆலயத்திற்கு அண்மையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
மண்டூர் மக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி குழுக்களின் வேண்டுகோளுக்கு இனங்க பா.உ ஞானமுத்து சிறிநேசன் அவர்களின் ஏற்பாட்டில் ஆரம்பமானது.
களுவாஞ்சிக்குடி இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் கோகுலவேந்தன் மற்றும் பிராந்திய முகாமையாளர் விஜிததர்மசேன ஆகியோரின் ஏற்பாட்டில் இப் போக்குவரத்துச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது
அதன் பிரகாரம் 01.02.2025 இன்று காலை 06.30 இற்கு மண்டூர்த் துறையடியில் இருந்து பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.