மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் தகவல்



மட்டக்களப்பு மாவட்டத்தில்.                      கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள்/சுயேட்சைகுழுக்கள்: 139. ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள்: 118 .

வேட்பாளர் தேடிப்பிடிக்க முடியாமல் இதில் பின்வாங்கிய கட்சிகள்/சுயேட்சைக்குழு:21.
ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள்:101.
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்:17

நிராகரிக்கப்பட்டவை;
•மட்டக்களப்பு மாநகரசபை:
1. ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஸ்.
2. ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
3. பொதுஜன ஐக்கியமுன்னணி.
4. ஐக்கியதேசியகட்சி.
(ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வேட்பாளர் பெயர் தர்சிக்கா)

•மண்முனைப்பற்று ஆரையம்பதி பி.தே.சபை:
5. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
6. ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.
7. சோ.மகேந்திரன் சுயேட்சை குழு.
8. சி.கிஜானன் சுயேட்சை குழு.
9. செ.தங்கவேல் சுயேட்சை குழு.
( சுரேந்திரன் சுயேட்சை குழுவில் மூவரின் பெயர் திலகவதி, திவாகர், பவளக்கொடி)

•கோறனைப்பற்று வாழைச்சேனை பி. ச:       10. வி.லவக்குமார் சுயேட்சை குழு.
11. கு.விமலேந்திரன் சுயேட்சை குழு.
(தனிவேட்பாளர் தேசியமக்கள் சக்தி செ.விமல்ராஜ்)

•கோறளைப்பற்று வடக்கு வாகரை பி.ச:
12. சர்வசன அதிகாரம்.
13. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.

•மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பி.ச:
14. ஐக்கிய மக்கள் சக்தி.

•போரதீவுபற்று வெல்லாவெளி பி. ச.
15. ஐக்கிய மக்கள் சக்தி
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ இரு வேட்பாளர்கள் ஒளிர்வளவன், சப்தஸ்வரன்)

•ஏறாவூர் பற்று செங்கலடி பி.ச:
16. விஜயகுமார் சுயேட்சை குழு.
(ஐக்கிய மக்கள் சகதி -ஒரு வேட்பாளர் பெயர்)

•காத்தான்குடி நகரசபை
17. சர்வசன அதிகாரக்கட்சி.

👉🏼நிராகரிக்கப்பட்ட கட்சிகள்/ சுயேட்சை குழுக்களின் கட்டுப்பணம் மீளப்பெறமுடியாது.
👉🏼கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாமல் உள்ள 21, கட்சி/சுயேட்சைக்குழுக்களின் கட்டுப்பணம் மீளப்பெறலால் கட்டுப்பணத்தில் குறிப்பிட்ட சில  வீதமான தொகையை கழித்து மீளப்பெறலாம்.

மட்டக்களப்பில் வாக்களிக்க தகமை பெற்ற வாக்காளர்கள்:455520. 
பிரதேசபைகள்:09
நகரசபைகள்:02
மாநகரசபை:1
மொத்தம்:12.
மொத்த வட்டாரங்கள்:144.
தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள்:444.

தெரிவு செய்யும் உறுப்பினர்கள்:274.
அதில் வட்டார ரீதியாக:146.
பட்டியல் ரீதியாக:128.

வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்குகள் 06/05/2025, பி.ப 4, மணிக்கு பின்னர் எண்ணப்பட்டு வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும்.(149, வட்டார பிரதிநிதிகள்)
தபால் மூல வாக்குச்சீட்டுக்களும் அந்தந்த வட்டாரத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பட்டு அங்கு காகித உறை உடைக்கப்பட்டு கணக்கெடுக்கப்படும்.

விகிதாசார கணக்கெடுப்பு அன்று இரவு 7, மணிதொடக்கம் பூரணமான முடிவுகள் அறிவிக்கும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வழமை போன்று செயல்படும்.
இங்கு விகிதாசார பிரதிநிதிகள் பட்டியல் பிரதிநிதிகள்  128, இந்த பிரதிநிதிகள் எந்தக்கட்சி, எந்த சுயேட்சை குழுவில் இருந்து தெரிவானார்கள் என்பது 60:40, கணக்கீடுகள் இடம்பெற்று முடிவுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பபட்டு அங்கிருந்து உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும்.

மாநகரமுதல்வர்/ பிரதிமுதல்வர்/தவிசாளர்/ பிரதி தவிசாளர் தெரிவு செய்யும் முறை:

ஒரு சபையில் 50, வீதத்துக்கு கூடுதலான அங்கத்தவர்களை ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு பெற்றால் அந்த கட்சியின் செயலாளர்/சுயேட்சைகுழு தலைவர் பதவி நிலைகளின் பெயரை குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பார். தேர்தல் ஆணைக்குழு தலைவர் வர்தமானியில் அறிவிப்பார்.

50, வீத உறுப்பினர்களை பெறாத கட்சிகள்/ சுயேட்சை குழுக்கள் முதலாவது சபை அமர்வில் உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு அலுவலரின் தலைமையில் ஜனநாயக முறையில் தெரிவுகள் இடம்பெறும்.
ஏகமனதாக அல்லது போட்டி நிலைமை எனில் வாக்கெடுப்பு மூலமாக நடைபெறும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12, சபைகளில் எந்த ஒரு சபையும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பது எனது கணிப்பு.
இணைப்பு ஆட்சிகளும், தொங்கு நிலை சபைகளாகவே தொடர வாய்புள்ளது.
புதியது பழையவை