இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ஈஸ்டர் பண்டிகையினை உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலியினை தொடர்ந்து நினைவு கூர்ந்தனர்.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரதான ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலி புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அதிகளவிலான இறை விசுவாசிகள் கலந்து கொண்டதுடன், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஈஸ்டர் ஆராதனை வழிபாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பல தேவாலயங்களில் நடைபெற்றது.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.