வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி, அக்பர் பள்ளிவாயல் வீதியில் மகனின் தாக்குதலில் தாய் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (06-04-2025)முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த தாயின் உடல் அதே இடத்தில் உள்ளதுடன், சந்தேகத்தில் மகன் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி திரு சம்பத் மற்றும் திரு தினேஷ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.