மட்டக்களப்பு மேச்சல் தரை போராட்ட வழக்கு இன்று



இன்று (21/04/2025)ஆம் திகதி  திங்கட்கிழமை மயிலதமடு மாதவனை பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்திற்கான வழக்கு 9,வது தவணையாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் உள்ளது.

மேச்சல் தரை போராட்ட வழக்கு கடந்த 19, மாதங்களாக தொடர்கிறது.

மயிலத்தமடு மேச்சல் தரை மீட்பு விடயமாக அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் செங்கலடி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த சமயம் மயிலத்தமடு மேச்சல் தரையை விடுவிக்குமாறு கோரி அவருக்கு எதிராக( 08/09/2023 )ல் கொம்மாதுறையில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சித்தாண்டி பண்ணையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி, ஊடகவியலாளர் இருவர், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட 37, பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிசாரால் வழக்கு தொடரப்பட்டு பின்னர் 30, பேரின் பெயர்களை வாசிக்கப்பட்டன.

28/10/2023- பொலிசார் நீதிமன்ற கட்டளையை தந்தனர்.

1, வது வழக்கு- 17/11/2023
2, வது தவணை-24/01/2024
3.வது தவணை- 04/03/2024
4, வது தவணை-20/03/2024
5, வது தவணை -15/05/2024                                                               6, வது தவணை -10/07/2024
7, வது தவணை-  16/10/2024 
8,வது தவணை-   22/01/2025
9,வது தவணை-21/04/2025

👉ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கு இலக்கம:    B/504/23,                                                         கடந்த 20/03/2024, ல் இந்த வழக்கு இலக்கம் மாற்றப்பட்டுள்ளது புதிய இலக்கம்: 43778/PC

ஆனால் ஜனாதிபதி ரணிலை எதிர்த்து போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், கலந்துகொண்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்படவில்லை, கலந்து கொள்ளாத சிலருக்கும் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 8, ம் தவணை 21/01/2025, இடம்பெற்றபோது ஒரு இலட்சம் சரீர பிணையில் 30, பேரும் ஒருவாரத்துக்குள் நீதிமன்றில் பிணையாளிகளுடன் சென்று  பதியுமாறு பணிக்கப்பட்டது.

ஆனால் எந்த போராட்டங்கள் செய்தும், மேச்சல்தரைகளை நேரடியாக சென்று பார்வையிட்டும், அந்த படங்களை சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் காட்டப்பட்டு விளம்பரம் தேடியதுதான் மிச்சம்.                                                   இதுவரை மயிலத்தமடு, மாதவனை, கெவிளியாமடு மேச்சல்தரைகள் பூரணமாக கிடைக்கவில்லை.
கடந்த 2011, ம் ஆண்டு தொடக்கம் 2025, வரை மேச்சல்தரை மீட்பு போராட்டங்கள் தொடர்தும் எந்த பலனும் இல்லை.

நீதிமன்றில் வழக்கு மட்டுமே மிச்சம், இதுபோன்றுதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பூரண நிர்வாக அதிகாரம் வழங்குமாறு வருடக்கணக்கில் போராட்டம் இடம்பெற்றும் ஒரு கணக்காளர் பதவி கூட வழங்கமுடியாமல் போராடியும் எந்த பலனும் இல்லை.

அதுகூட கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2022, தொடக்கம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டும் எந்த பலனும் இல்லை.. வழக்கு நீண்டு செல்வதை மட்டுமே காணமுடிகிறது.

பா.அரியநேத்திரன்
புதியது பழையவை