மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்கள்
இன்றைய தினம் சனிக்கிழமை (12.04.2025 )ஆம் திகதி களுவாஞ்சிகுடி நகரிலுள்ள பலசரக்கு கடைகள் மற்றும் உணவங்களில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்களால்   விசேட உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.




தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி நகரை அண்டிய வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவில் மக்கள் அதிக ஆர்வம் காட்டும் நிலையிலேயே மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவே சுற்றி வளைப்புக்களும் சோதனைகளும் அண்மைய நாட்களில் அடிக்கடி களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெறுகிறது.

இன்றைய தினம் 14 பலசரக்குக் கடைகளும் 2 உணவகங்களும் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒரு இரசாயன பகுப்பாய்வும் மேற்கொள்ளப்பட்டது இச் சோதனை நடடிக்கையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 4 உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன். மனித நுகர்வுக்கு பொருத்த மற்ற பொருட்களை விற்பனைசெய்தோத 3 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




புதியது பழையவை