வெலம்பொட, கோவில்கந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கு 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை (20-05-2025) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கோவில்கந்த வட்டப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலம்பொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.