நடந்து முடிந்த 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்கள் பிரதேச ரீதியாக இடம்பெற்று வருகின்றன. வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் ஆட்சியமைப்பது தொடர்பாகவும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக உறுதியான பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தல்,மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றிய பல்வேறு விடயங்கள் இவ்வுரையாடல்களின் இடம்பெற்றுவருகின்றன.
அவ்வகையில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபை வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (13-05-2025) வெல்லாவெளியில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், உட்பட கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.