யாழில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!



சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(08.05.2025) நடந்துள்ளது.

இதன்போது, ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 39 வயதுடைய குணரட்னம் குமரன் எனும் இளைஞன்  உயிரிழந்துள்ளார்.


சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்த போதே அவரை மின்னல் தாக்கியுள்ளது.


இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதியது பழையவை