பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக் கிளைத்தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோருடைய கூட்டு முயற்சியாக யாழ் முஸ்லிம் மக்களை அணைத்து செல்ல இந்த முடிவாம்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுடனான நல்லிணக்க செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் வலுவாக அமைந்திருக்கின்றன, என்பதற்கு மேற்படி நியமனம் மிகுந்த முன்னுதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும், சாட்சியமாகவும் அமைந்திருக்கின்றது. என முஷ்லிம்மக்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் 13ம் வட்டாரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட சகோதரர் அப்துல்லாஹ், ஒப்பந்த அடிப்படையில் அவரோடு இணைந்து போட்டியிட்ட சகோதரர் முஹம்மது இர்பான், மற்றும் பாத்திமா றிஸ்லா ஆகியோர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், சமூக நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை பிரதிநித்துவம் செய்து முற்போக்காக செயற்படுவார்கள் என்றும் யாழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.