மட்டக்களப்பு மாநகர சபை மேயராக சிவம் பாக்கியநாதன் , பிரதி மேயராக வைரமுத்து தினேஸ்குமார் தெரிவு!



மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு அஸ்மி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று ?11.06.2015 )ஆம் திகதி காலை இடம்பெற்றது.



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் அவர்கள் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் அவர்கள் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டக்களப்பு  மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.


அத்தோடு பிரதி முதல்வராக கௌரவ வைரமுத்து தினேஸ்குமார் அவர்கள் போட்டிக்கு மத்தியில் மொத்த 34 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
புதியது பழையவை