முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைகளில் தீ பரவல்!



முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16-06-2025) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன.

மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவும் பலத்த காற்று வீசுகின்றது. காற்றின் வேகத்தினால் தீபரவல்  மிக வேகமாக அதிகரித்துள்ளது. தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசக்கூடும் மிக மிக மக்கள் அவதானமாக இருக்கவும்.  




முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படை பிரிவு இல்லாமையினால் உடனடி நடவடிக்கையாக  படையினரின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

புதியது பழையவை