சிறிய ரக லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதி அந்நூர் அகடமி அருகில் வைத்து இன்று (28-06-2025) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கொழுப்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொரியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொரியின் டயர் வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் லொரியை ஒழுங்கு படுத்தியுள்ளனர்.