மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அதிநவீன கட்புல சோதனை இயந்திரம் வழங்கி வைப்பு!



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கட்புல சோதனை இயந்திரம், "அபயம்"அமைப்பினால் கடந்த வியாழக்கிழமை (26.06.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை பிரிவில் நீண்ட கால தேவைப்பாடாகவிருந்து வந்த குறித்த கட்புல சோதனை இயந்திரத்தை, கண் சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க அபயம் அமைப்பு வழங்கி வைத்துள்ளது. 


இந்நிகழ்வில் கண்சத்திர சிகிச்சை நிபுணர் , வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர் மற்றும் அபயம் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கண்சத்திரசிகிச்சை நிபுணர் கூறுகையில், மிக நீண்ட கால தேவைப்பாடாக இருந்து வந்த இந்த பெறுமதியான அதிநவீன சோதனை இயத்திரத்தினை வழங்கிய அபயம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்ததோடு இவ்வியந்திரத்தின் பயன்பாடு அளப்பரியது எனவும் தெரிவித்திருந்தார். 

அபயம் அமைப்பானது மாவட்டத்தின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை