இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்து ஆலயம் மக்கள் பயன்பாட்டுக்கு



யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.



கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.






இந்நிலையில் நேற்று(15-06-2025) ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை