கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக - சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமனம்!



அம்பாறை கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மர்ஹூம் முகம்மட் சுபையிர் ஆசிரியரினதும் இப்ரா லப்பை பதிலா ஆகியோரின் புதல்வராவார் மற்றும் இலங்கையின் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் உஷாம் சுபையிரின் இளைய சகோதரரும் ஆவார்.

இவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவரும் ஆவார். இவர் கடல் சார்ந்த பல திறமைகளைக் கொண்டு இலங்கை கடற்படை கல்லூரியில் பயிற்சியை பெற்று தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

சப் லெப்டினன் மொஹம்மட் சமி, கடற்ப்படையில் பல உயர்வுகளை பெற்று மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என்று மருதமுனை மண் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதியது பழையவை