மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் இன்று புதன்கிழமை (11-06-2025) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 26, 23 வயதுகளையுடைய இருவரே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு வீதித் தூணில் மோதுண்டுள்ளதாக தெரியவருகிறது.