நீண்ட வறட்சியின் பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இன்று (28-06-2025) மாலை இடியுடன் கூடிய கடும் மழை பெய்கின்றது.
நாட்டில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இடி முழக்கத்துடன் காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களது இயல்பு நிலை பாதிப்படைந்திருந்தது.