இறக்காமம் அக்கரைப்பற்று பிரதான சாலையில் விபத்து!



அம்பாறை மாவட்டம் இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான சாலையில் உள்ள குளத்தாவாளி சந்திக்கு அருகாமையில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


பாதையால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.





விபத்துக்குள்ளான இரண்டு சாரதிகளும் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை