கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்துவதற்கான வழக்கு இன்று (30/07/2025) கொழும்பு மேல் நீதுமன்றில் எடுக்கப்பட்டு ஏழுமாதங்கள் ஒத்திவைப்பட்டுள்ளது அடுத்த தவணை அடுத்த வருடம் 2026, ஜனவரி,28, ல் இடம்பெறும்..!
கல்முனை வடக்கு பிரதேச வழக்கினை 28.01.2026 அன்று நீதிமன்றம் ஒரே நேரத்தின் கீழான வாதத்திற்கு நிலைநிறுத்தி உள்ளது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களும் கனிஷ்ட சட்டத்தரணிகளான நிலோசன் தர்ஷிக்கா அவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் தோன்றி இருந்ததோடு எதிராளிகள் மற்றும் இடையீட்டு மனுதார்கள் சார்பிலும் சட்டமா அதிபர் திணைக்களமும் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசால் முஸ்தபா மனோகர டி சில்வா மற்றும் சஞ்சீவ ஜயவர்த்தன , விரான் கொரியா கனிஷ்ட சட்டத்தரணிகளான பூபதி, நப்றத் நஜிமுடின்,ராசி முகமட்,ருடானி ஷாஹிர் ஆகியோர் தோன்றியதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் சார்பில்
சட்டத்தரணிகளான நிரான் அன்கிட்டல்,ஜூட் டினேஸ் ஆகியோர் தோன்றி முன்னிலையாகி இருந்தனர்.
இன்றைய வழக்கானது நீதியரசர்களான மஹேன் கொப்லேவா மற்றும் மாயாதுன்னே கொரியா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது
300/18, 0067/23, 645/23 ஆகிய வழக்கு கோவைகள் ஒரே நேரத்தில் விசாரிக்க கருதி கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றது.