மன்னாரில் மறுபடியும் மறுசீரமைக்கப்பட்ட தந்தை செல்வா சிலை ..!



மன்னாரில் இன்று (01-07-2025) தந்தை செல்வாவின் சிலை மறுபுனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலை கடந்த புதன்கிழமை (25/06/2025) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதோடு, இதில் தொடர்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

உள்ளூராட்சிசபை தவிசாளர் தெரிவில் இடம்பெற்ற முரண்பாட்டிற்கு பின்னர் சிலருடைய தூண்டுதலால் தந்தை செல்வா சிலை சேதமாக்கப்பட்டிருந்தது.

இதனை மீளவும் மறுசீரமைத்து மன்னார் மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாளஷ்நிர்மலநாதன் தலைமையிலான குழுவினர் மீண்டும் இன்று(01/07/2025) துரித கெதியில் மிகவும் அழகாக இதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை