மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்ப வந்தாறுமூலை பிரதான வீதியில் பொதுநூலகத்திற்கு அருகாமையில் இன்று விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கிளை வீதி ஒன்றினூடாக திரும்ப முற்ப்பட்ட வேளை பின்னால் பயணித்துக்கொண்டிருந்த பட்டா ரக வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதிய நிலையில் முச்சக்கரவண்டியும் வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதுடன் பட்டா வாகனமும் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



