நீண்ட காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த காங்கேயனோடை - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான பஸ் சேவை ஆரம்பம்!


காங்கேயனோடை - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான ஊர் வீதி ஊடான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை மீண்டும் இன்று(14-07-2025) திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு எடுத்த நடவடிக்கையின் பேரில் இந்த பஸ் சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மண்முனைப் பற்று பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பெளஸான் தலைமையில் காங்கேயனோடையில்ல் நடைபெற்ற இன்றைய இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பாளர் அப்துல்லாஹ் இலங்கை போக்கு வரத்து சபையின் பிராந்திய செயலாற்று முகாமையாளர் உவைஸ் காத்தான்குடி டிப் போ முகாமையாளர்
நசார்தீன் மண்முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மதீன் உட்பட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த பஸ் சேவையானது தினமும் காலை 5.45 மணி. தொடக்கம் மாலை 6 மணி வரை சேவையில் ஈடுபடவுள்ளது..

பஸ் சேவை காங்கேயனோடை. ஆரையம்பதி காத்தான்குடி நாவற்குடா நொச்சி முனை கல்லடி ஊர் வீதி ஊடாக சென்று மட்டக்களப்பு நகர் மட்டக்களப்பு. போதனா வைத்தியசாலை வரை இடம்பெறவுள்ளது.

புதியது பழையவை