கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடலானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (12-07-2025)ஆம் திகதி நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களின் பிரதான பங்குபற்றலுடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் உடன்பட கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




