“பிள்ளையான்” என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் காவலில் இருந்தபோது 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
உயித்த ஞயாறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே இந்த விடயத்தை கூறிய அவர், தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே அவர் அதைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் குறித்த நீண்டகால விசாரணையில் இந்தக் கூற்று ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கின்றது.