கொஸ்கொட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!



கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31-07-2025)ஆம் திகதி  அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.




பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
புதியது பழையவை