க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடம் பிடித்துள்ள மாகாணம்!



2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வெளிவந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய சித்தி பெற்ற மாணவர்களின் வீதங்களின் அடிப்படையில் மாகாணங்களின் நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


மாகாணங்களின் நிலை
1.தென் மாகாணம் 75.64 சதவீதம்.

2.மேல் மாகாணம் 74.47 சதவீதம்.

3.கிழக்கு மாகாணம் 74.26 சதவீதம்.

4.மத்திய மாகாணம் 73.91 சதவீதம்.

5.சப்ரகமுவ மாகாணம் 73.47 சதவீதம்.

6.ஊவா மாகாணம் 73.14 சதவீதம்.

7.வடமேல் மாகாணம் 71.47 சதவீதம்.

8.வடமத்திய மாகாணம் 70.24 சதவீதம்.

9.வட மாகாணம் 69.86 சதவீதம்.

இதேவேளை, 237,026 மாணவர்கள், 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

அவர்களில் 13,392 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். இது மொத்த மாணவர்களில் 4.15 சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை