அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த வாஸித் MP



அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரமவை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் (14-07-2025) சந்தித்து பொத்துவில் பிரதேசத்திலுள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடினார். 

பொத்துவில் பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் ஏற்பட்டுள்ள தடங்கள், ஆளணிகள் பற்றாக்குறை மற்றும் வன இலாக திணைக்களத்தினால் எந்தவித முன்னறிவித்தல்களும் இல்லாமல் எல்லைக் கற்கல் இடுவது, காணிகள் கையகப்படுத்துவது தொடர்பாகவும், பொத்துவில் பிரதேசத்தில் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற மக்கள் அன்றாடம் பாவிக்கக் கூடிய ஆற்று மணல் அகழ்வுகளில் ஏற்பட்டிருக்கும் தடங்கள்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் மணல் அகழ்வு தொடர்பான தடங்கள்களை தீர்ப்பதற்காக உடனடியாக செயற்பட்ட அரசாங்க அதிபர், பொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர், பொத்துவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அது தொடர்பான  அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும் கேட்டுக்கொண்ட அதேவேளை பொத்துவில் பிரதேச செயலகத்தில் காணப்படுகின்ற காணி பிரிவில் ஆவணங்கள் வழங்கள் சம்மந்தமாக உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். 

அத்துடன் ஏனைய பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை தான் பெற்றுத்தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸிதிடம் அரசாங்க அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதியது பழையவை