ஒக்டோபர் 1ஆம் திகதியில் பேரிடியாகும் இலங்கை அரசின் அறிவிப்பு!



ஒக்டோபர் 01ஆம் திகதியில் இருந்து வெளிநாட்டில் இருந்து பெறப்படும் டிஜிட்டல் மூலமான சேவையை இலங்கையர்கள் பெரும் போது அவர்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது எந்த வழியிலாவது வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே, கிடைக்கும் அத்தனை வழிகளிலும் வரிகளை அறிவிட வேண்டும் என அரசாங்கம் விரும்புகின்றது.

இந்நிலையில், அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள குறித்த டிஜிட்டல் சேவை மூலமான வரி அரவிடப்படப்போகும் முறை குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஏனெனில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பெறப்படும் இந்த சேவைகளின் அளவை அளவிட்டு அதற்கேற்ப வரியை அரவிடுவது மிகவும் கடினமான விடயமாகும்.
புதியது பழையவை