கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் 2 நாட்களில் 120 வெளிநாட்டவர்கள் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் தற்காலிக ஓட்டுநர் அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள விசேட கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த மூன்று நாட்களில் 120 வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
“சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுவதை தடுக்கவும் மற்ற நாடுகளில் இதுபோன்ற வசதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
24 மணிநேரமும் செயற்படும் வகையில் இந்த கவுண்டர் செயற்பட்டு வருகிறது. கோரிக்கையின் பேரில் சில அனுமதிகளை நாங்கள் வழங்க முடியாது.
முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படுவதில்லை. அத்தகைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.