இலங்கையின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய


இலங்கையின் 37வது பொலிஸ்மா அதிபராக (IGP) பிரியந்த வீரசூரியவை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவை ஆராய்வதற்காக அரசியலமைப்புச் சபை நாளை பிற்பகல் 1:30 மணிக்கு கூடவுள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் இடம்பெறுகிறது. தற்போது பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றும் பிரியந்த வீரசூரியவின் நியமனத்திற்கு அரசியலமைப்புச் சபையின் ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டால், அவர் நிரந்தரமாக இலங்கையின் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார்.
புதியது பழையவை