மருதமுனை பிரதான வீதியில் விபத்து - கல்முனை மாநகர சபை ஊழியர் உயிரிழப்பு!

அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் இன்று (28.08.2025) காலை  இடம்பெற்ற வீதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிகின்றன.

கல்முனை மாநகர சபையில் காவலாளி கடமை புரிகின்ற பாஸ்கரன் என்பவர் கடமை முடிந்து பெரிய நீலாவணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையில் இன்று காலை(28.08.2025) மருதமுனை யில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை