மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில்
சட்டவிரோத மணல் அகழ்வாளர்களினால் தோண்டப்பட்ட பாரிய பள்ளத்தாக்கில் தேங்கியிருந்த நீர் நிலையில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக (13.08.2025)ஆம் திகதி இறங்கிய இவர் ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயுள்ளார்.
வேப்பவெட்டுவான் - பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய ஜோசப் தவராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக கரடிய்னாறு பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
நேற்று (14-08-2025 )ஆம் திகதி உடற்கூற்று பரிசோதனை முடிவுற்றதும் பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.