மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!


மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்கி, 2026 முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

2024 நவம்பர் மற்றும் 2025 இல் தேர்தல்களை நடத்தியுள்ளோம். அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என நம்புகிறோம்.

சட்டச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிக்கிறோம், எனவும் அரசியலமைப்பு திருத்தம் ஒரு விரிவான செயல்முறை எனவும், மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் இதற்கான விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை