மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு கூழாவடி கிராமத்தில் ஒருவர் காட்டு யானை தாக்கி(02.08.2025)ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச சபையின் பாலையடிவட்டாரத்தில் காட்டு யானையின் அட்டகாசத்தினால் வீடுகள், விவசாயம்,ஊயிர்சேதங்கள் ஏற்பட்டன.
இதனை கட்டுப்படுத்தும் முகமாக நெல்லிக்காடு,கூழாவடி,பா37ஆம் கிராமம் பாலையடிவட்டை, 35ஆம் கிராமம் கண்ணபுரம், கண்ணபுரம் கிழக்கு,விளாந்தோட்டம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளை சேதப்படுத்தி வந்த காட்டுயானைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் இரவு பகல் பாராது வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் ஒத்துளைப்புடன் மற்றும் பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் கிராமங்களில் உள்ள சிறு காடுகளில் தங்கி நிக்கும் யானைக்கூட்டத்தினை வெளியேற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.