மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் மின்கம்பத்தில் மரம் விழுந்ததால் மின்தடை..!


மட்டக்களப்பு வெல்லாவெளி  கலைமகள் வித்தியாலய பாடசாலைக்கு அருகே, மற்றும் மண்டூர் ஆகிய கிராமத்தில்  நேற்று மாலை(23.08.2025) வீசிய காற்றினால்  மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. 


வீசிய காற்றினால் மரம் முறிந்து மின்கம்பத்தில் விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து களுவாஞ்சிகுடி  மின்சாரசாபை  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  இன்று(24.08.2025)காலை சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.



மின்கம்பம் மீது மரம் விழுந்ததால் போரதீவுப்பற்று பிரதேசத்தில்  பல இடங்களில் மின்சாரம் வினியோகம் நேற்று மாலை மணி முதல் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
புதியது பழையவை