இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று(27.08.2025) நள்ளிரவு முதல் ஒருங்கிணைந்த கால அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் எட்டு தொழிற்சங்கங்களில் ஏழு தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதோடு, ஜே.வி.பியின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல், நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை போக்குவரத்து தலைமையகத்திற்கு முன்னால் அனைத்து தொழிற்சங்கங்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளன.
நாங்கள் ஒருங்கிணைந்த கால அட்டவணைக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த நேரத்தில் அவ்வாறுச் செய்ய முடியாது.
நாள் முழுவதும் இயக்க 6500 பேருந்துகள் தேவை, ஆனால் எங்களிடம் 4000க்கும் குறைவான பேருந்துகளே உள்ளன.
அதனால் தனியார் துறையுடன் போட்டியிட முடியாது. மேலும் அமைச்சர் எங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஒருங்கிணைந்த அட்டவணையின்படி, பேருந்து சேவையின் போது ஒரு இ.போ.ச பேருந்து பழுதடைந்தால், மற்றொரு இ.போ.ச பேருந்து வருவதற்கு பல மணிநேரம் ஏற்படும்.
இதற்கு முறையான ஏற்பாடு செய்யப்படும் வரை நாங்கள் பேருந்து சேவையில் ஈடுபடுவதில் விலகி நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.