வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸுடன் மோதி விபத்து - ஒருவர் காயம்!



முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் தேக்கங்காட்டுப் பகுதியில் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்த பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதுண்ட விபத்தில் ஒருவர் காயமடைந்து புதுக் குடியிருப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

நேற்று (01-08-2025) மாலை 5.40 மணியளவில் விஸ்வமடு தேராவில் தேக்கங்காட்டு பகுதியில் திருகோணமலையிலிருந்து வருகை தந்த பஸ்ஸின் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸுடன் மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளது.



இதில் படுகாயம் அடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை