மாணவி கிரிசாந்தியின் 29, வது ஆண்டு நினைவு.!

1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன.

அந்த மாணவி அந்த வாரம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றாள், இன்னும் சில மணிநேரங்களில் அவள் இரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.

அன்று 1996 செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர வேதியியல் பாட சோதனை எழுதிவிட்டு கிரிசாந்தி சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் காணாமல் போனார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் முற்பகல் 11:30 மணியளவில் அவர் உயிருடன் காணப்பட்டார். 

அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து அவரது தாயாருக்குத் தெரிவித்தனர். கிரிசாந்தி நாள்தோறும் பள்ளியிலிருந்து திரும்பும் போது சோதனைச் சாவடியைக் கடப்பது வழக்கம்.
இதனால் கவலையடைந்த அவரது தாய் ராசம்மா, தம்பி பிரணவன் (வயது 16), குடும்ப நண்பரும் அயலவருமான சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது-35, தென்மராட்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உதவியாளர்) ஆகியோர் கிரிசாந்தியை தேடி சோதனைச் சாவடிக்குச் சென்றனர். அவர்களும் கொல்லப்பட்டனர்.பன்னாட்டு மன்னிப்பு அவை அவளுக்காக 1996 செப்டம்பர் 20 அன்று அவசர நடவடிக்கை மேல்முறையீட்டை (UA 222/96) வெளியிட்டது.

தமிழ்நெட் செய்தியின்படி, 45 நாட்களுக்குப் பின்னர், நான்கு பேரின் உடல்களும் பின்னர் இராணுவ தளத்திற்குள் கண்டெடுக்கப்பட்டன. ராசம்மாவின் சடலத்தின் கழுத்தில் முக்கால் அகலத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது. கிருபாகரனின் உடலில் கயிறு இறுக்கப்பட்டிருந்ததால், கிருபாகரனும் அதே முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார். கிரிசாந்தியினதும், அவரது தம்பி பிரணவனினதும் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, கறுப்பு நிற தாள்களால் சுற்றப்பட்டிருந்தன.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கிரிசாந்தி ஐந்து இராணுவத்தினரால் கடத்தப்பட்டதாகவும், ஆறு பேர் அவரை சோதனைச் சாவடியில் வைத்து குழு பாலியல் வல்லுறவு செய்து கொன்றதாகவும் தெரியவந்தது.                                           

இறுதியாக கிரிசாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்தனர்.                    இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக அப்போது கூறப்பட்டது.

இன்று 07/09/2025, ல் 29, ஆண்டுகள் கடந்தும் இதுவரை முறையான நீதி இல்லை கிரிசாந்தி கடத்தப்பட்டு கொலைசெய்து புதைக்கப்பட்ட பகுதியான செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை ஏறக்குறைய 230, தமிழர்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

புதியது பழையவை