மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரைக்கு சென்ற காட்டு யானைகள்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பெருநிலப்பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தலாக உள்ள காட்டு யானைகள் நேற்று (13/09/2025) இரவு வேளையில் படுவான்கரைபெருநிலத்தையும், எழுவான்கரை பகுதியையும் ஊடறுத்துச்செல்லும் வாவியை(ஆறு) ஊடறுத்து கடந்து எழுவாங்கரைப் பகுதியிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தை அண்டிய பிரதேசத்திற்குள் வேலிகளை உடைத்து சேதப்படுத்தியும்,செட்டிபாளைய கிராமத்தில்  பயன் தரும் வாழை, கரும்பு, மற்றும், விவசாய தோட்டங்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரைகாலமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாக்ரைப்பெருநிலப் பகுதியிலேயே இவ்வாறு தொடற்ச்சியாக தொல்லை கொடுத்த காட்டுயானைகளின் அட்டகாசங்கள் தற்போது எழுவான்கரைப்பகுதிளிலும் வாவியை கடக்க பழகிவிட்டது.                                             

இதனை கருத்தில் எடுத்து படுவான்கரைப்பெருநிலத்தில் காட்டு யானைகளை வரவை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டால் எழுவான்கரை நகரப்பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

புதியது பழையவை