மட்டக்களப்பில் மழையுடனான வானிலை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (17.09.2025)பிற்பகல் 4 மணியளவில் மகிழவட்டவான் கிராமத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதாவாகியுள்ளது.
பலத்த இடியுடனான மின்னல் ஏற்ப்பட்டு வளவு ஒன்றிலிருந்த வேம்பு மரத்தில் மின்னல் தாக்கியதுடன் அருகே இருந்த வீட்டில் இணைக்கப்பட்டிருந்த மின்இணைப்பையும் முற்றாக தாக்கி சேதமடையச் செய்துள்ளது.