தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்ட நாமல்.!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராமவில் அமைந்துள்ள அதிகாரபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது சிரேஸ்ட புதல்வருமான நாமல் ராஜபக்ச உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பப் புள்ளிக்குச் சென்றார் மகிந்த
மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் விஜேராம இல்லத்திலிருந்து தங்காலைக்கு சென்றார்.

தமது தந்தை எங்கு ஆரம்பித்தாரோ அந்த இடத்திற்கு சென்றுள்ளார் என நாமல் பதிவிட்டுள்ளார்.

எல்லா விடயங்களும் எங்கு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ஆரம்பப் புள்ளிக்கு அவர் சென்றுள்ளார் என உருக்கமாக நாமல் குறிப்பிட்டுள்ளார். 

மெய்யான பலம் மக்களின் அன்பினால் கிடைக்கப் பெறுமே தவிர பதவிகள், வரப்பிரசாதங்களில் அல்ல என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை