வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை.!

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை நேற்று(11.09.2025)வியாழக்கிழமை மாலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை வந்தடைந்தது.

மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (05.09.2025) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பமாகி நேற்று(11.09.2025) வியாழக்கிழமை மாலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய ஆன்மீக பாதயாத்திரையானது ஏழு நாட்களைக் கொண்டதாக அமைந்தது.

குறித்த யாத்திரையில் நந்திக்கொடி ஏந்தியவாறு அரோகரா கோசத்துடன் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஆலயத்தினை வந்தடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையிலான ஆன்மீக பாதயாத்திரை மண்டூர் தொடக்கம் வெருகல் வரையான பிரதான வீதியில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு யாத்திரிகர்கள் சென்று தரிசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை