மட்டக்களப்பில் இன்று (12.09.2025) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டன.
நாடாவியரீதியாக பாடசாலை மாணவர் போக்குவரத்துக்கான புதிய விதிமுறைகளை கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு மேம்பாட்டுக்காக, பாடசாலை பேருந்துகளின் நிலை பரிசோதிக்கப்பட்டு, மேலதிக பொருத்தப்பட்ட உபகரணங்கள் அகற்றப்பட்டன. பரிசோதனையில் ஜே.கே. அழகப்பெரும, நுவன் குலதிலக, போக்குவரத்து பொலிஸ் அலுவலக பொறுப்பதிகாரி ஆர்.கே. செனவிரத்ன மற்றும் பல போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.