இலங்கை வந்த வெளிநாட்டு பெண் துஸ்பிரயோகம்.!

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணை நபர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடாவ விகாரைக்கு அருகே கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மனி பெண்ணை அழைத்து சென்று தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஜெர்மனி பெண்ணுக்கு நண்டுகளைக் காட்ட கடற்கரையில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் கடற்றொழிலாளர் ஒருவர் தங்காலை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர் தங்காலை, பள்ளிக்குடாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுயடைவராகும்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான ஜெர்மன் பெண் மற்றும் சிலர் கடந்த சில நாட்களாக சினிமோதராவின் நகுலுகமுவவில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் தங்கியுள்ளனர்.


இந்நிலையில் அப் பெண் தங்காலை, பள்ளிக்குடாவ விகாரை அருகே உள்ள கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை