களுத்துறை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு.!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 அன்று சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்ததில் காயமடைந்தார்.


நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நிலை மோசமடையவே மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (15.09.2025) இரவு உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை