மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் பிரதேசத்தில் இன்று (12.10.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பகுதியிலிருந்து கண்டி பகுதியை நோக்கிச் சென்ற காரும் வாழைச்சேனை பகுதியிலிருந்து கிரான் பிரதேசத்தை நோக்கிச்சென்ற சிறிய எல்ப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்ட சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றறனர்.