முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு பகுதியில் நேற்று (30.10.2025) பொலிஸ் ஜீப் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மாடுகள் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்தே இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் வாகனத்தில் பயணித்த சில பொலிசார் சிறுகாயமடைந்துள்ளனர். எனினும் ஜீப் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது.