கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த “பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி – 2025” தொடக்க நிகழ்வு இன்று (30.10.2025) காத்தான்குடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தாருல் அர்க்கம் வளாகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹி அவர்களின் நெறிப்படுத்தலிலும், காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா அவர்களின் தலைமையிலும் இடம்பெற்றது.
இக்கண்காட்சியானது இன்று (30.10.2025) மற்றும் நாளை (31.10.2025) ஆகிய இரண்டு நாட்களாக நடைபெறவுள்ளது. காத்தான்குடியின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்கவும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் மற்றும் காத்தான்குடி நகர சபை செயலாளர் றினோஸா முப்லிஹ், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தனூஜா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் றஊப் , நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜறூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி வங்கி முகாமையார்களான எம்.ஏ.சுல்மி, எஸ்.எச்.எம்.முஸம்மில் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் . பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.